Advertisement

காலில் ரத்தம் சொட்ட சொட்ட பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த ‘சூப்பர்மேன்’ டூப்ளசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அசாதாரண பங்களிப்பை கொடுத்து வருபவர் டூப்ளசிஸ். அதனை இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் செய்து காட்டியுள்ளார். 

image

பத்தாவது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், லாங்-ஆன் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்றிருப்பார். அந்த பகுதியில் ஃபீல்டிங்கை கவனித்துக் கொண்டிருந்த டூப்ளசிஸ் அதை லாவகமாக கேட்ச் பிடித்து மோர்கனை வெளியேற்றி இருப்பார். பவுண்டரி லைனுக்கு அருகே மிகவும் நேர்த்தியாக பேலன்ஸ் செய்து அந்த கேட்சை எடுத்திருந்தார் அவர். 

அப்போது அவரது இடது காலின் மூட்டுப் பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர் விளையடினார். களத்தில் ஃபீல்ட் செய்த போது அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆட்டதில் 30 பந்துகளில் 43 ரன்களை குவித்து அவர் அவுட்டாகி உள்ளார். 

பவுண்டரி லைனில் கேட்ச் பிடிப்பதில் டூப்ளசிஸ் சிறந்தவர் என ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments