Advertisement

சிஎஸ்கே vs ஆர்சிபி: இன்றைய ஆட்டத்தில் இடம்பெற வாய்ப்பிருக்கும் வீரர்கள் யார் யார்?

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கோலி தலைமையிலான மும்பை அணியும் மோத இருக்கிறது.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றி, இரண்டு தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருக்கிறது. எனவே இன்றையப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்றையப் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் யார் என்பதை உத்தேசப்பட்டியலாக பார்க்கலாம்.

image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி (கேப்டன்)
தேவ்தத் படிக்கல்
கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்)
ஏபி டி வில்லியர்ஸ்
கிளென் மேக்ஸ்வெல்
சச்சின் பேபி
வனிந்து ஹசரங்கா
ஹர்ஷல் படேல்
சஹால்
முகமது சிராஜ்
ஜேமிசன்

image

சென்னை சூப்பர் கிங்ஸ்

டூப்ளசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயின் அலி
சுரேஷ் ரெய்னா
தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
அம்பத்தி ராயுடு
சாம் கரண்
டுவைன் பிராவோ
ரவீந்திர ஜடேஜா
ஷர்துல் தாக்குர்
தீபக் சஹார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments