Advertisement

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்போடு அந்த அணியால் வைக்க முடியும். 

image

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனின் முதல் பாதியில் இரு அணிகளும் டெல்லி மைதானத்தில் விளையாடி இருந்தனர். அதில் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

ஹைதராபாத் அணியில் கேப்டன் மாற்றம், அணியின் வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு என பல்வேறு சங்கடங்கள். ஜேசன் ராய் அந்த அணிக்காக இன்று ஆடும் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தன.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments