டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. இடது கை பேட்ஸ்மேனும், வலது கை சுழற்பந்து வீச்சாளருமான மொயின் அலி, ஷார்டர் பார்மேட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
“எனக்கு இப்போது 34 வயதாகிறது. என்னால் முடிக்கின்ற வரையில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். மற்ற பார்மெட் கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகச்சிறந்தது. அன்றைய நாள் ஆட்டம் சிறப்பானதாக அமைய வேண்டும். அவ்வளவு தான். நான் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்தே விளையாடி உள்ளேன்.
என்னை பொறுத்தவரை அந்த பார்மெட்டில் நான் சிறப்பான பங்களிப்பை அணிக்காக கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார் மொயின் அலி.
கடந்த 2014-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார் மொயின் அலி. 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்களும், 195 விக்கெட்டுகளும், 40 கேட்ச்களும் பிடித்துள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2021 சீசனில் விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments