Advertisement

டி20 உலகக் கோப்பை : ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்! 190 ரன்கள் குவிப்பு!

நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதல் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்துள்ளது. 

image

ஆப்கன் அணியின் தொடக்க வீரர்கள் ஹஜ்ரத்துல்லா ஜசாய் மற்றும் முகமது ஷெசாத் 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதை அப்படியே நகர்த்தி ஸ்கோர் போர்டை உயர்த்தும் பணியை செய்திருந்தனர் அவர்களுக்கு பின்னால் வந்திருந்த பேட்ஸ்மேன்கள். 

ஜசாய் 44 ரன்கள், முகமது ஷெசாத் 22 ரன்கள், ரஹ்மானுல்லா குர்பாஸ் 46 ரன்கள், நஜிபுல்லா ஜாட்ரான் 59 ரன்கள் மற்றும் முகமது நபி 11 ரன்களும் எடுத்திருந்தனர். மொத்தம் 11 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தனர் ஆப்கன் பேட்ஸ்மேன்கள். அதில் சில 100 மீட்டர்களுக்கு மேல் ஸ்ட்ரைக் செய்யபபட்டவை. 13 பவுண்டரிகளும் இதில் அடங்கும். 

image

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த 190 ரன்கள் தான் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும். 

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஸ்காட்லாந்து விரட்டுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments