Advertisement

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முஜிபுர் ரகுமான், ரசித் கான் சுழலில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது.
 
சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நஜிபுல்லா 59 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி 3 ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது. ஆனால் 4ஆவது ஓவரை வீசவந்த முஜிபுர் ரகுமான் தொடக்க வீரர் உள்பட 3 விக்கெட்களை அதே ஓவரில் சாய்த்தார்.
 
image
அதன்பின்னர் ரசித் கான் சுழலில் தாக்குதல் தொடுக்க 60 ரன்களுக்கு ஸ்காட்லாந்து அணி சுருண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்களையும் ரசித் கான் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments