அமீரகத்தில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் களம் காண்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூர் அணி ஏற்கெனவே தகுதிப்பெற்ற நிலையில் ஹைதராபாத் அணி ஆறுதல் வெற்றிக்காக களம் காண்கிறது.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 19 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில், ஆர்சிபி 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மற்றும் 12 போட்டிகளில் வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
ஆர்சிபி 12 ஆட்டங்களில் எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் முனைப்பில் ஆர்சிபி அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணிகள்:
பெங்களூரு: விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன்/ டிம் டேவிட், ஜார்ஜ் கார்டன்/ கைல் ஜேமிசன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.
ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார்/ சந்தீப் சர்மா, உம்ரான் மாலிக் மற்றும் சித்தார்த் கவுல்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments