Advertisement

Black Lives Matter: இனவெறிக்கு எதிராக இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் மண்டியிட்டு முழக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர். அதற்காக வீரர்கள் ஒரு காலில் மண்டியிட்டு, ஒரு கையை மேல் உயர்த்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  

image

அமெரிக்காவில் இனவெறி சர்ச்சையால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கத்தின் மூலமாக இனவெறிக்கு எதிராக தங்களது கண்டனங்களை உலக மக்கள் பகிர்ந்து வருகின்றனர். 

image

இந்நிலையில் இந்த எதிர்ப்பு குரல் தற்போது டி20 உலகக் கோப்பையிலும் எதிரொலித்து வருகிறது. இதற்கான தொடக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் தொடங்கி வைத்தது. சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்க - ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து, இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments