Advertisement

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்கள்... கண்டித்த சேவாக்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்களை சேவாக் கண்டித்துள்ளனார்.

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமியை முரட்டுத்தனமாக ரசிகர்கள் இணையவெளியில் ட்ரோல் செய்திருந்தனர். ரசிகர்களின் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக். 

image

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதனால் ரசிகர்கள் ஷமியை மனம்போன போக்கில் சாடியிருந்தனர். 

இந்த நிலையில் ஷமிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். 

image

“முகமது ஷமி மீது இணையவெளியில் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் நாம் அவருடன் நிற்க வேண்டும். அவர் ஒரு சாம்பியன். மேலும் இந்த இணையவெளி தாக்குதல் கும்பலுடன் ஒப்பிடுகையில், அவரோ, இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சீருடையை அணிந்து விளையாடிய வீரர். இந்தியாவை தங்கள் மனதில் வைத்துக் கொண்டு விளையாடுயடிவர்” என சேவாக் தெரிவித்துள்ளார். 

மறுபக்கம் இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “இவர்கள் வேறு யாரும் இல்லை. முன்பு வீரர்களின் கொடும்பாவிகள் மற்றும் வீடுகளில் கற்களை எறிந்தவர்கள்தான்இந்த ஆன்லைன் ட்ரோல் செய்யும் நபர்கள். இப்போது சமூக வலைத்தளங்களில் போலியான பெயர் மற்றும் படங்களை வைத்துக் கொண்டு திரிபவர்கள்” என தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments