உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அபுதாபியில் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி தொடரில் விளையாடிய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. வங்கதேச அணி இலங்கையை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில் போராடி தோல்வியுற்றது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நமீபியா அணிக்கு தொடரில் இது முதல் போட்டியாகும். ஸ்காட்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டி செய்ய தீர்மானித்தது.
அணி விவரம்…
வங்கதேசம்!
முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹிம், மமுதுல்லா (கேப்டன்), அஃபிஅப் ஹோஸைன், நருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மஹெதி ஹசன், நசும் அஹமது, தஸ்கின் அஹமது, முஸ்தபிகூர் ரஹ்மான்.
இங்கிலாந்து!
ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேரிஸ்டோவ், லியம் லிவிங்ஸ்டன், இயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்தன், அடில் ரஷித், டைமல் மில்ஸ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments