ஐபிஎல் தொடரில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் பிளே ஆஃப்புக்குள் ஏற்கெனவே நுழைந்து விட்டது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் 11 பேர் வீரர்கள் யார் யார் என்பதை உத்தேசமாக பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச அணி
யஷாஸ்வி ஜெய்ஸ்வால்
எவின் லெவிஸ்
சஞ்சு சாம்சன்
கிளென் பிலிப்ஸ்
மஹிபால் லோம்ரோர்
ரியான் பராக்
கிறிஸ் மோரிஸ்
ராகுல் டெவாட்டியா
கார்த்திக் தியாகி
சேட்டன் சக்காரியா
முஸ்தபிசுர் ரஹ்மான்
சென்னை சூப்பர் கிங்ஸ்
டூப்ளசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயின் அலி
சுரேஷ் ரெய்னா
அம்பத்தி ராயுடு
தோனி
ரவீந்திர ஜடேஜா
டுவைன் பிராவோ
ஷர்துல் தாக்கூர்
ஜோஷ் ஹேசல்வுட்
தீபக் சஹார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments