பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தருக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை. ஒட்டுமொத்த உலகிலும் அவர் பிரபலமான கிரிக்கெட் வீரர். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றத்து தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான PTV தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றுள்ளது.
இந்த விவாத நிகழ்ச்சியில் அக்தர், கிரிக்கெட் அனலிஸ்டாக பங்கேற்றிருந்தார். அந்த நிலையில் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்த ஒருங்கிணைப்பாளர் ‘அரங்கத்தை விட்டு வெளியேறுங்கள் அக்தர்’ என சொல்லி உள்ளார். அதையடுத்து தான் அக்தர் டிவி விவாத நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார்.
தன்னை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும், அவமான படுத்தியதாகவும் அக்தர் தெரிவித்துள்ளார். அதனால் தான் வெளியேறியதாகவும் அக்தர் தெரிவித்துள்ளார். அக்தருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஹோஸ்ட் நியாஸ், மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நிகச்சியின் ஹோஸ்ட் மற்றும் அக்தருக்கு இடையே சிக்க எழ காரணம் தொடர்ச்சியாக தன்னிடம் ஹோஸ்ட் வைத்த கேள்விகளை அக்தர் பதில் ஏதும் சொல்லாமல் புறக்கணித்துள்ளார். அதே நேரத்தில் அதற்கு மாறாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் Haris Rauf குறித்து அக்தர் பேசி உள்ளார். அதுவே சிக்கல் மாற்று முரனுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக பங்கேற்ற சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர், ரஷித் லத்தீப், உமர் குல், ரஷித் லத்தீப், ஆக்கிப் ஜாவேத் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் சனா மிர் ஆகியோர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர். அக்தர் 46 டெஸ்ட் மற்றும் 163 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் நாட்டு அணிக்காக விளையாடி உள்ளார் அக்தர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments