நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.
148 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 51 ரன்கள், ஃபாக்கர் ஜமான் 30 ரன்கள், ஆசிப் அலி 25 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை சூப்பர் 12 சுற்றில் பதிவு செய்துள்ளது பாகிஸ்தான். இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் குரூப் 2-வில் முதலிடத்தில் நீடித்து வருகிறது பாகிஸ்தான்.
இந்த போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கரிம் ஜனத் வீசினார். ஆறு பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி வெற்றி பெற செய்தார் ஆசிப் அலி. ஆப்கானிஸ்தான் இறுதி நேர பதற்றத்தால் வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தி தோல்வியை தழுவியுள்ளது ஆப்கானிஸ்தான். பேட்டிங், பவுலிங் என வலுவான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தியது.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments