Advertisement

ரோகித்துக்கு பதில் இஷான் கிஷான்? செய்தியாளரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த கோலி!

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு விராட் கோலி அளித்த நெத்தியடி பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு காணொலி வாயிலான சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ரோகித் ஷர்மாவை நீக்கிவிட்டு நல்ல ஃபார்மில் உள்ள இஷான் கிஷானை அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத கோலி, அதற்கு ஷாக் ரியாக்ஷன் கொடுத்ததோடு நீங்கள் உண்மையாகத்தான் கேட்கிறீர்களா? என்று வினவினார். இருபது ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை நீக்க வேண்டுமா என்று கேட்டு கிண்டலாகவும் சிரித்தார்.
 
image
மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதனை தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அதற்கு ஏற்றாற்போல் பதில் அளிக்க வசதியாக இருக்கும் என்று கூறி செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார். கோலியின் இந்த பதிலுடன் கூடிய வீடியோ மற்றும் அவரது கிண்டலான, ஷாக் ரியாக்ஷன் போன்ற புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கிடையே மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, பாகிஸ்தான் பெற்ற இந்த ஒரு வெற்றியால் இந்த உலகமே தனக்கும் இந்திய அணிக்கும் முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை என்றும் கூறினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments