Advertisement

SRH vs KKR ஆட்டத்தை மைதானத்திற்கு வந்து நேரில் பார்த்த டேவிட் வார்னர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வரும் போட்டியை மைதானத்திற்கு வருகை தந்து, நேரில் கண்டுகளித்துள்ளார்.

imageஅதோடு ஹைதராபாத் அணியின் கொடியை அவ்வப்போது வீசியும் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் அவர். இருந்தாலும் வீரர்கள் அமர்ந்திருக்கும் டக்-அவுட் பகுதிக்கு வராமல், மைதானத்தின் அப்பர் டெக்கில் ஹைதராபாத் அணியின் சப்போட்டர்களுடன் அமைந்து ஆட்டத்தை பார்த்தார் அவர். 

இந்த சீசனில் ஹைதராபாத் அணி விளையாடிய பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆடும் லெவனில் வார்னர் இடம் பெறவில்லை. வார்னர் விளையாடாத முதல் இரண்டு போட்டிகளில் மைதானத்திற்கே அவர் வரவில்லை. அதோடு ஹோட்டல் ரூமில் இருந்தபடி சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லி இருந்தார் வார்னர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments