Advertisement

இந்தியா VS நியூசிலாந்து : இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் விவரம்!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் விவரத்தை பார்ப்போம். 

image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி இருந்தன. இந்நிலையில் தான் இரு அணிகளும் இந்த போட்டியில் மோதுகின்றன. 

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ், சூரியகுமார் அல்லது இஷான் கிஷனா என நிலவும் மிடில் ஆர்டர் குழப்பம், புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் மாதிரியான சிக்கல்கள் இந்தியாவுக்கு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்லி இருந்தனர். 

பாண்டியா விளையாட தயாராக இருப்பதாக கோலியும் சொல்லி இருந்தார். அதை வைத்து பார்க்கும் போது இந்திய அணி ஆடும் லெவனில் எந்தவித மாற்றத்தையும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. 

image

ஆடும் லெவன் விவரம்!

கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments