நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி 125 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சுலப இலக்கை விரட்டுகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் நஜிபுல்லா ஸத்ரான் 48 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பவுலர்கள் போல்ட், சவுதி, மில்னே, ஜேம்ஸ் நீஷம், சோதி மாதிரியான பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments