Advertisement

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில், குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்-2 பிரிவிலிருந்து பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அபுதாபியில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
 
image
2010ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், 2007, 2016ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்த முறை இறுதி சுற்றுக்குள் நுழைய கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 13 முறையும், நியூசிலாந்து அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments