Advertisement

"54 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்காமல் இந்திய அணி வீணடித்துள்ளது" - ஹர்பஜன் சிங்

நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் 54 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் இந்தியா வீணடித்ததே தோல்விக்கான முக்கிய காரணம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் 2-ஆவது லீக் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா மீண்டும் ஒருமுறை பெரும் சருக்கலை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

image

இது குறித்து ஹர்பஜன் சிங், "நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 54 பந்துகளில் ரன்களை அடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 9 ஓவர்களை இந்தியா வீணடித்துள்ளது. எனக்கு தெரிந்த டி20 போட்டிகளில் எந்தவொரு அணியும் இத்தனை பந்துகளை வீணடித்திருக்காது. அந்த ஒவ்வொரு பந்திலும் ரன் அடித்திருந்தாலும் நம்மால் ஒரு மிகப்பெரிய ஸ்கோரை எட்டியிருக்க முடியும். போட்டியின் முடிவும் வேறுமாதிரி இருந்திருக்கும். இந்த டாட் பந்துகள்தான் இந்தியாவின் தோல்வியை தீர்மானித்ததாக நினைக்கிறேன்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்தை சிறப்பாக கையாள்வார்கள், ஆனால் நேற்று அவர்களால் ஒரு ரன்னை தட்டிவிட்டு ஓடவே சிரமப்பட்டார்கள். இதுபோன்ற அழுத்தங்களால் கோலி போன்ற பொறுமையான வீரர்களே தவறான ஷாட் அடித்து அவுட்டாகினர். இது எல்லாமே அழுத்தங்களால் ஏற்பட்ட தவறுகள்" என்றார் ஹர்பஜன் சிங்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments