Advertisement

88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த அனுஷ்கா ஷர்மா - பிசிசிஐ ட்விட்டால் "ஷாக்கான" ரசிகர்கள்

மகளிர் கிரிக்கெட் போட்டியில் அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாக, பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்தனர்.
 
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. உள்நாட்டு மகளிர் வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படும் இத்தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா பி அணியின் கேப்டனாக இருப்பவர் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா.
 
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும் இந்தியா பி அணியும் மோதின. ஆட்டத்தின் ஸ்கோர் அப்டேட்கள், 'BCCI Women' என்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வந்தன. அப்போது, 'இந்தியா பி அணியின் வீராங்கனை அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாகும், அணியின் ஸ்கோர் 140/0 என்றும் ட்விட் செய்யப்பட்டிருந்தது. இந்த ட்விட்டைக் கண்டவர்கள் சற்று குழப்பமடைந்தனர்.
 
image
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மனைவி பெயரும் அனுஷ்கா ஷர்மா என்பதால், அவர்தான் இவரா? அனுஷ்கா ஷர்மா எப்போது கிரிக்கெட் அணியில் இணைந்தார்? அனுஷ்கா ஷர்மாவா...? என கேள்விக்குறியிட்டும் நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். அந்த ஒரு ட்விட்டுக்கு மட்டும் லைக்ஸ் எண்ணிக்கை மளமளவென குவிந்தது. அந்த ட்விட்டை ஸ்கீரின்ஷாட் எடுத்து மீம்ஸ்களாக மாற்றி பகிர்ந்து வந்தனர். ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா என்ற பெயரை அனுஷ்கா ஷர்மா என சுருக்கி பதிவிட்டதாலே இந்த குழப்பம் உருவாகியிருப்பதாக விபரமறிந்த நெட்டிசன்கள் கமெண்டில் விளக்கம் கொடுத்தனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments