டி20 கிரிக்கெட் என்றால் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் மற்றும் ஆல்ரவுண்டர் பிராவோவின் பெயர் இருக்கும். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவில் நடைபெறும் பல்வேறு லீக் போட்டிகளில் இவர்கள் இருவரும் அதிகம் விளையாடி உள்ளனர். அதன் மூலம் ரசிகர்களையும் எண்டர்டெயின் செய்துள்ளனர்.
இந்நிலையில் பிராவோ நடப்பு டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ‘குட்-பை’ சொல்லியுள்ளார். மறுபக்கம் கெயில் அது குறித்து எதையும் தெளிவாக சொல்லவில்லை. இருந்தாலும் அவர் அவுட்டானதும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவரை கட்டி அணைத்து பாராட்டி இருந்தனர். அதை பார்க்கும் போது அவருக்கு இதுவே கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
பிராவோ தனது கடைசி டி20 போட்டியில் பேட் செய்து 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். பந்து வீசியபோது 4 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்திருந்தார். கெயில் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற போதும் அணியில் இருதுள்ளனர்.
View this post on Instagram
அவர்கள் இருவரது படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘சகாப்தம் முடிந்தது’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments