இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியது. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் முதன்மையானதாக இந்திய அணி பலராலும் கருதப்பட்டது. இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர் மீதும் அவ்வளவு எதிர்பார்ப்பு. அத்துடன் இல்லாமல், இந்திய வீரர்கள் நீண்ட நாட்களாக அமீரகத்தில் இருப்பதும் கூட சாதகமாக சொல்லப்பட்டது.
ஆனால், நடந்ததோ வேறு கதை. மிகுந்த ஏமாற்றத்தையை இந்திய அணி ஏற்படுத்தியது. சூப்பர் 12 சுற்றில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதுவும் கடைசி இரண்டு போட்டிகளில் இந்த வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா படுதோல்வி அடைந்தது. ஒரு விக்கெட் இழக்காமல் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறையில் இந்திய வீரர்கள் தடுமாறினர்.
சரி முதல் போட்டிதான் முடிந்தது இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி. கடைசியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி ஆறுதல் அளித்துள்ளது.
முதல் இரண்டில் ஒரு போட்டியிலாவது இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்புகக்கு உறுதியாக சென்றிருக்கும். தற்போது அந்த வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பெறுகின்ற வெற்றி தோல்விகளை பொறுத்தே அமைந்துள்ளது. நாளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் வாய்ப்பு இழுத்து மூடப்படும்.
இந்நிலையில், இந்தியாவின் இந்த கடைசி இரண்டு வெற்றிகளை கொண்டாடுவாதற்கு பதிலாக ரசிகர்கள் ஆதங்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது.
‘இப்ப அடிச்சி என்ன பண்றது?’ என்ற டோனில் இந்த ஆதங்கங்கள் வெளிப்பட்டு வருகின்றன. ‘கொஞ்சம் லேட்டு தான். இருந்தாலும் இப்போதாவது பெரிய ஆட்டக்காரர்கள் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்துவது சூப்பர்’ என சொல்லி ஆருடம் சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.
உண்மையில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல. இருந்தும் ஆப்கானிஸ்தான் அணி நாளையப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் தற்போது வேண்டிக்கொண்டிருக்கிறது. நாளையப் போட்டியில் ஏதேனும் மிராக்கிள் நடந்தால் இந்திய அணிக்கு மிரக்கிளான வாய்ப்பு இருக்கும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments