இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியில் நியுசிலாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்த தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 93 ரன்களில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் சஃபியான் ஷரிப், ப்ராட் வீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து அணியும் சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தது. எனினும் அந்த அணியால் இருபது ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மைக்கெல் லீஸ்க் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ட்ரண்ட் போல்ட், ஈஷ்வர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். குரூப் 2-ல் 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments