இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதவிக் காலம் முடிந்துள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் பயோ பபூளுக்குள் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேனை கொண்டு வந்தாலும் அவர் தாக்குப்பிடித்து விளையாயடுவது கஷ்டம் தான் என சொல்லியுள்ளார்.
“இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஆறு மாதங்களாக பயோ பபூளில் தான் இருந்து வருகிறார்கள். அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் சோர்ந்து போயுள்ளனர். நானும் கூட மனதளவில் சோர்ந்து போயுள்ளேன். பயோ பபூளில் இருக்கும் போது இது மாதிரியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
இந்த பயோ பபூளில் ஆஸ்திரேலிய அணியின் லெஜென்டான டான் பிராட்மேனை கொண்டு வந்தோம் என்றால், அவரும் இது மாதிரியான சோர்வுகளை பெறுவார். அது அவரது ஆட்டத்தின் சராசரியை குறைக்கும்” தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ள சூழலில் அவர் பயோ பபூளில் இருக்கும் போது வீரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து வெளிப்படையாக சொல்லியுள்ளார்.
“சிலர் எண்ணுவது போல எரிபொருளை ஊற்றி, மற்றவர்களை இயக்க செய்யும் செயல் அல்ல. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் எழுச்சி பெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments