நியூசிலாந்து அணி இறுதிநாள் உணவு இடைவேளை வரையில் ஒரு விக்கெட்டை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
4- ஆம் நாள் ஆட்ட இறுதியில் இந்திய அணி 81 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இறுதிநாளான இன்று 2 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 197 ரன்கள் தேவைப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments