நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் என இருவரும் தங்களது விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு விக்கெட்டை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை.
இந்த நிலையில் சவால் நிறைந்த ஆடுகளத்தை தயார் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கான்பூர் மைதான ஆடுகள பராமரிப்பாளரிடம் சொன்னதாகவும். அதற்காக சுமார் 35000 ரூபாய் அவர் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரை இந்தியா 3 - 1 என கைப்பற்றியது. அந்த தொடர் நடைபெற்ற ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட், சவால் நிறைந்த ஆடுகளத்தை உருவாக்க சொல்லி உள்ளார். இது பரவலாக கிரிக்கெட் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிக்கலாம் : டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments