இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஒரு மோட்டார் வாகனப் பிரியர். பல விலை உயர்ந்த கார்களையும், மோட்டார் பைக்குகளையும் அவர் வீட்டு கெராஜில் சேகரித்து வைத்துள்ளார். அதில் புது வருகையாக இணைந்துள்ளது யமஹா RD 350 பைக்.
பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே யமஹா நிறுவனத்தின் R சீரிஸ் (R5, RD 350, RD 400, RX 100, RXG, RXZ, RX 135) வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த பைக் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ராஜ்தூத் 350 என்பதன் சுருக்கம் தான் RD 350.
இந்த நிலையில் தற்போது முழுவதும் கஸ்டமைஸ் (பிரத்யேகமாக மீண்டும் உருவாக்கப்பட்ட) செய்யப்பட்ட RD 350 பைக் ஒன்றை தோனி வாங்கியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சையத் ஜதீர் என்ற பைக் வடிவமைப்பாளர் இதனை வடிவமைத்துள்ளார்.
“Competition கிரீன் என்ற வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட பச்சை நிற RD 350 பைக்கை தான் தோனி வாங்கியுள்ளார். தோனியின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக நாங்கள் RD 350 பைக் வடிவமைப்பதை அவர் அறிந்து கொண்டுள்ளார். அதோடு எங்களை தொடர்பு கொண்டார். தற்போது பைக் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்கிறார் சையத்.
சையத் மற்றும் குழுவினர் வடிவமைத்த மற்றொரு மஞ்சள் நிற RD 350 பைக் ஒன்றையும் தோனி பார்வையிட்டுள்ளார். அதோடு அதன் பெட்ரோல் டேங்கில் தனது ஆட்டோகிராப்பும் போட்டுள்ளார் தோனி. இப்போது அதனை விலைமதிப்பற்ற பைக்காக பார்ப்பதாக சொல்கிறார் சையத்.
இதையும் படிக்கலாம் : டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments