இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் சூப்பர் 12 சுற்றில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியா இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ள சூழலில் இந்திய கேப்டன் விராட் கோலியின் யுக்திகளை விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.
“நியூசிலாந்து அணியின் பவுலர்கள் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஆனால் அதை இப்படி மாற்றியும் சொல்ல முடியும். அன்றைய நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய ஆட்டம் தான் நியூசிலாந்து பவுலர்களை ஆட்டத்தில் உயர்த்தி நிறுத்த காரணம் என சொல்லலாம்.
கேப்டன் கோலி எப்போதுமே களத்தில் வியூகங்களை சரியாக கட்டமைக்கும் ஸ்ட்ராடெஜிஸ்டாக என்னை ஈரத்து இல்லை. அதை மீண்டும் இந்த போட்டியில் செய்துவிட்டார். தொடக்க வீரர்கள் மாற்றம் தொடங்கி அந்த ஆட்டத்தில் அவர் வகுத்த வியூகங்கள் எதுவம் பலன் கொடுக்க வில்லை. ஆனால் தோனி இப்படி செய்யமாட்டார். அதை நான் அவருக்கு கீழ் விளையாடியுள்ள ஒரு வீரராக பார்த்ததில் இருந்து சொல்கிறேன். ஒரே ஆட்டத்தில் இத்தனை மாற்றங்களை செய்யலாமா?” என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ளார் கவதம் கம்பீர்.
முன்னதாக, தொடக்க வீரராக விளையாடி வந்த ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கினார். வழக்கமாக மூன்றாவது வீரராக விளையாடும் விராட் கோலி 4வது இடத்தில் விளையாடினார். முதல் போட்டியில் விளையாடிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் உள்ளே வந்தார். அதேபோல், சூர்யகுமார் யாதவை தூக்கிவிட்டுதான் இஷான் கிஷனை கொண்டுவந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி அணியில் நிறைய மாற்றங்கள் செய்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கினார் விராட் கோலி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments