Advertisement

அரையிறுதியில் மோதும் பாகிஸ்தான் vs. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து vs. நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது; இங்கிலாந்து அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.
 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அந்தவகையில் குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப்-2 பிரிவிலிருந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் பாகிஸ்தான் அணி, தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
image
இந்தியா, இலங்கை, வங்காள தேசம், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன. இதையடுத்து அபுதாபியில் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாயில் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments