
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில் இந்திய அணி வரும் 16-ஆம் தேதி தென்னாப்பிரிக்க புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் வீரர்கள் அனைவரும் மும்பையில் இன்று முதல் பயோ-பபூளில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலியும், ஒருநாள் அணியை ரோகித் ஷர்மாவும் கேப்டன்களாக வழிநடத்துகின்றனர். வரும் 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இந்திய டெஸ்ட் அணி விவரம் : விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர் மற்றும் சிராஜ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments