Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளும் மோதிய கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி 'டிரா' செய்தது. இந்நிலையில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட்டை எதிர்நோக்கியுள்ளன. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
 
image
மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 9 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் இரண்டரை மணி நேரம் தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்தப் போட்டயில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார்.
 
இந்திய அணி விவரம்: சும்பன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சாஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், அக்ஸர் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணி விவரம்: வில் யங், டாம் லேதம், மிட்செல், டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், டாம் பிளண்டல், ரச்சின் ரவீந்திரா, ஜேமிசன், டிம் செளதீ, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments