
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும், பாலிவுட் சினிமா நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி உள்ளார். அவரது வாழ்த்து செய்தியை சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கோலி.
View this post on Instagram
“இந்த நான்கு ஆண்டுகளாக எனது மொக்கையான ஜோக்குகளையும், எனது சோம்பேறித்தனத்தையும் கையாண்டு உள்ளீர்கள். கடவுள் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதம் இந்த நான்கு ஆண்டுகள். நேர்மையான, அன்பான, துணிச்சலான பெண்ணை மணந்து கொண்டு நான்கு ஆண்டுகளாகி உள்ளது. உலகமே நமக்கு எதிராக நின்றாலும் எது சரியோ அந்த பக்கம் நிற்க எனக்கு உத்வேகம் கொடுத்தவர்.
நான் என்றென்றும் உங்களை காதலிப்பேன். உங்கள் மீதான காதல் எனக்கு கூடிக் கொண்டேதான் இருக்கும். இந்த நாள் மிகவும் இனிமையான நாள். ஒரு குடும்பமாக நமது முதல் திருமண நாள் இது. வாமிகாவினால் வாழ்வே நிறைவடைந்துள்ளது” என கோலி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 13: ஆஸி.யை கூட்டு சேர்ந்து போட்டு தாக்கிய டிராவிட் - லக்ஷ்மன் இணையர்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments