வரும் 2002 ஜனவரி 17 முதல் 30-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. டென்னிஸ் உலகின் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான இந்தத் தொடரிலிருந்து விலகி உள்ளார் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் டொமினிக் தீம்.
28 வயதான அவர் 2020 ஆஸ்திரேலிய ஓபன், 2018 மற்றும் 2019 பிரெஞ்சு ஓபன் இறுதியில் விளையாடி உள்ளார். 2020 அமெரிக்க ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார்.
“அனைவருக்கும் வணக்கம். துபாயில் பயிற்சியை முடித்துவிட்டு நான் நாடு திரும்பி உள்ளேன். இந்த பயிற்சியில் சில பின்னடைவுகள் இருந்தது. மணிக்கட்டில் எனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் சரியாகி உள்ளது. இயல்பாக பயிற்சி செய்து வருகிறேன்.
எதிர்வரும் கோர்டோபா ஓபன் தொடரில் பங்கேற்கும் விதமாக வரும் ஜனவரி மாதத்தின் இறுதியில் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவேன். அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரை நான் மிஸ் செய்கிறேன். நான் அதிகம் நேசிக்கும் நகரம் மற்றும் அந்த நகரத்தின் மக்களுக்கு மத்தியில் என்னால் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். ஆனால் வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நான் பங்கேற்பேன். இதனை நானும், எனது அணியும் சரியான முடிவாக பார்க்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என தீம் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments