Advertisement

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: ரோகித் சர்மா விலகல்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலியும், ஒருநாள் அணியை ரோகித் சர்மாவும் வழிநடத்துகிறார்கள். இந்நிலையில் அண்மையில் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது, அதில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

image

இந்நிலையில் பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "பயிற்சியின் போது ரோகித் சர்மாவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியாங்க் பஞ்சல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...ஹெலிகாப்டர் விபத்து: மீட்புப் பணிக்கு உதவிய முதல்வருக்கு லெஃப்டினன்ட் ஜெனரல் நன்றி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments