
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து ரோகித், இந்திய அணியின் முழுநேர ஷார்டர் பார்மெட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார்.
“இந்திய அணிக்காக விளையாடும் போது பிரஷர் (அழுத்தம்) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்த அழுத்தம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். மக்கள் எப்போதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டு இருப்பார்கள். ஒரு கிரிக்கெட் வீரனாக இதை சொல்கிறேன். இப்போது நான் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம். அதைவிடுத்து மக்கள் பேசுவது குறித்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் பேசுவதை நம்மால் நிறுத்த முடியாது. இதை நான் பல லட்சம் முறை சொல்லி உள்ளேன். தொடர்ந்து சொல்வேன்” என தெரிவித்துள்ளார் ரோகித்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments