Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம் விளாசல்

செஞ்சுரியன்: செஞ்சுரியன் நகரில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி 117 ரன்கள் குவித்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் மயங்க் அகர்வால் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 123 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின், சேதேஷ்வர் புஜாரா ரன் எடுக்காத நிலையில் நிகிடி பந்தில் நடையை கட்டினார்.

கே.எல்.ராகுலுடன் இணைந்த கோலி பொறுமையாக விளையாடினார். ஆனால், 35 ரன்களில் நிகிடி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே களமிறங்கினார். சீராகரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல்தனது 7-வது சதத்தை விளாசினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments