மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால். இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை தோற்கடித்து தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையா் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பிரபல ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை இன்று எதிர்கொண்டார். மெல்போர்னின் ராட் லேவர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மழை குறுக்கிட்டது. இதனால் மைதானத்தின் கூரை மூடப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஈரப்பதமான வானிலை மேட்டியோ பெரட்டினிக்கு சாதகமான ஒன்று. பலமுறை இதுபோன்ற தருணங்களில் மேட்டியோ பெரட்டினியின் கை களத்தில் ஓங்கியிருந்துள்ளது. இதனால் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறவைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments