கேப்டவுன் நகரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியாவைவிட 13 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி பவுலர்கள் தென்னாப்பிரிக்க அணியை விரைவாக ஆல் அவுட் செய்ய முயன்றனர். இல்லையெனில் தென்னாப்பிரிக்க அணி இந்த இன்னிங்ஸில் முன்னிலை ஒவ்வொரு ரன்னும் இந்தியாவுக்கு சுமையாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க அணியின் பீட்டர்சன் 166 பந்துகளில் 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்த போது 179 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். பீட்டர்சன் விக்கெட் வீழ்ந்த பிறகும் தென்னாப்ரிக்காவை ஆல் அவுட் செய்ய முடியாமல் இந்திய பவுலர்கல் திணறினர். ரபாடா 15, ஒலிவியர் 10, ஜன்சன் 7 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 210 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்ரிக்க அணி ஆல் அவுட் ஆனது. 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அது தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெல்லும் முதல் தொடர் என்ற வரலாற்று சாதனையாக அமையும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments