Advertisement

இன்று 2வது ஒருநாள் போட்டி: வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரின், முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கத் தவறினர். தவறுகளை சரிசெய்து, வெற்றி பெறும் முனைப்பில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

image

முதல் போட்டி நடைபெற்ற பார்ல் நகரில், இரண்டாவது ஆட்டம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் தென்னாப்ரிக்க அணி இன்று களமிறங்குகிறது.

இதையும் படிக்கலாம்: தவான் ரிட்டன் முதல் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் வரை -முதல் ஒருநாள் போட்டியின் முக்கிய ஹைலைட்ஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments