இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கிறிஸ் கெய்ல்,"இந்தியாவின் 73வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி அவர்களுடனும் இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய தனிப்பட்ட உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியைக் கேட்டு நான் விழித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்
கிறிஸ் கெய்ல் இந்த தலைமுறையின் மிகப்பெரிய பேட்டிங் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் அவர் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராகவும் உள்ளார். அவர் இதுவரை 455 டி20களில் விளையாடி 14,364 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments