Advertisement

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: கேப்டன் கோலி படைக்க உள்ள சாதனைகள்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நாளை ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி சில சாதனைகள் படைக்க உள்ளார்.

image
அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்!
வாண்டரர்ஸ் மைதானத்தில் வெறும் 7 ரன்கள் சேர்த்தால் வெளிநாட்டை சார்ந்த பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக கோலி முதலிடம் பிடிப்பார். இந்த மைதானத்தில் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோலி, முறையே 119, 96, 54 மற்றும் 41 ரன்களை சேர்த்துள்ளார். அதன் மூலம் மொத்தம் 310 ரன்களை கோலி எடுத்துள்ளார். தற்போது முதலிடத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஜான் ரீட், 316 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சாதனையை கோலி இந்த டெஸ்ட் போட்டியில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களில் சச்சின் (1,161), டிராவிட் (624) மற்றும் கோலி (611) ரன்கள் எடுத்துள்ளனர். இதில் கோலி கூடுதலாக 14 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடம் பிடிப்பார்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது கேப்டனாக கோலி செயல்பட்டு வென்று காட்டிய 41-வது டெஸ்ட் போட்டியாக அமையும். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு ஸ்டீவ் வாஹ் (41 வெற்றி) சாதனையை கோலி சமன் செய்வார். அதோடு இதன் மூலம் அதிக வெற்றிகளை குவித்த டெஸ்ட் கேப்டன்களில் கோலி மூன்றாவது இடத்தை பிடிப்பார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments