Advertisement

கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி - லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும். கொரோனா பாதிப்பிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லியின் பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லேசான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தற்போது கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments