Advertisement

‘புஷ்பா’ அல்லு அர்ஜுன் கெட்டப்பில் சி.எஸ்.கே. வீரர்- வைரலாகும் புகைப்படம்

‘புஷ்பா’ அல்லு அர்ஜுன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. கிரிக்கெட்டில் மூத்த வீரரான இவர் சமூகவலைத்தளப் பக்கங்களில், ஆக்டிவ்வாக இருப்பவர். இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளங்களும் உண்டு. தற்போது காயம் காரணமாக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று வருகிறார்.

image

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 17-ம் தேதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப்பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'. தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான இந்தப்படம் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. குறிப்பாக, அல்லு அர்ஜுனின் தாடி மீசையுடன் சற்று வித்தியாசமான கெட்டப் மற்றும் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் ஆகிய இரண்டும் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்தப் படத்தை இந்தி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

image

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த கெட்டப் கொண்ட தத்ரூபமான புகைப்படத்தை, ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பதிவிட்டு பின்குறிப்பாக, “நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை. இப்படத்தில் நான் புகைப்பிடிக்கும் பீடி கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது மற்றும் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ‘புஷ்பா’ பட வசனத்தை அல்லு அர்ஜுன் பாணியில் பேசும் வீடியோவை பகிர்ந்தநிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments