‘புஷ்பா’ திரைப்படத்தில், ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜூனின் நடன அசைவுப்போல், விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில், கிரிக்கெட் வீரர்கள் சிலர் மைதானத்திலேயே ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனால், இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இமிடேட் செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா போன்றோர் ஏற்கனவே, ‘புஷ்பா’ படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்களை இமிடேட் செய்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி பாடலின் நடன அசைவுகளை, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ மற்றும் பங்களாதேஷ் வீரர் நஸ்மூல் இஸ்லாம் ஆகியோர் மைதானத்திலேயே ஆடி ரசிகர்களை உற்சாசப்படுத்தினர். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். போன்றே பங்களாதேஷ் நாட்டிலும் பி.பி.எல். எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் என்ற போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நேற்று கோமில்லா விக்டேரியன்ஸ் (Comilla Victorians) மற்றும் பார்ச்சுன் பாரிஷல் (Fortune Barishal) ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
அப்போது, கோமில்லா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த நேரத்தில், 18-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ வீசினார். அப்போது மெஹிதுல் இஸ்லாம் என்பவரின் விக்கெட்டை அதே ஓவரில் பிராவோ வீழ்த்த, மறுநொடியே ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடிய ஸ்டெப் ஒன்றை சில நொடிகள் ஆடிக் காட்டினார் பிராவோ. விக்கெட் அல்லது ரன்கள் அடிக்கும் போது, மிக வித்தியாசமான நடனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிராவோ, தற்போது புஷ்பா பாடலில் நடனத்தை போட்டு மீண்டும் வைரலாகி இருக்கிறார்.
https://twitter.com/FanCode/status/1485971845094715392?s=20
இதேபோல், பி.பி.எல். எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் மற்றொருப் போட்டியில், மினிஸ்டர் குரூப் தாக்கா மற்றும் சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில், மினிஸ்டர் குரூப் தாக்கா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 15-வது ஓவரை பங்காளதேஷ் வீரரும், சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணி வீரருமான நஸ்மூல் இஸ்லாம் என்கிற நஸ்மூல் அப்பு வீசினார். அப்போது, மினிஸ்டர் குரூப் தாக்காவின் கேப்டனான மகமதுல்லா விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில், மைதானத்திலேயே ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடிய ஸ்டெப் ஒன்றை சில நொடிகள் ஆடிக் காட்டினார் நஸ்மூல் இஸ்லாம். இந்த இரு வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/FanCode/status/1485899291873153032?s=20
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments