Advertisement

பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி - சீனாவை வீழ்த்திய இந்தியாவுக்கு வெண்கலம்

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்திய இந்தியா வெண்கலப்பதக்கத்தை வென்றது

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் மஸ்கட்டில் நடைபெற்று வந்தன. இதில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றியது. முன்னதாக இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 2 - 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் சாம்பியன் பட்டம் வென்றது.

image

அரையிறுதி போட்டியில் இந்தியாவை தென் கொரியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் அணி முன் எப்போதும் இல்லாத வகையில் 4ஆவது இடம் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய பெண்கள் அணி நழுவவிட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments