நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஏழ்மையான தறி தொழிலாளியின் மகன் ,ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்.
ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி துரைசாமி. இவரது மகன் லோகேஷ், சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். படிப்படியாக விளையாடி மும்பை ரயில்வே அணியில் இடம் பெற்றார். பின்னர் அதிலும் சிறப்பாக விளையாடி தற்போது ரஞ்சி கோப்பைக்கு தேர்வாகி உள்ளார்.
வறுமையை கடந்து முன்னேறி இருப்பதாக கூறும் லோகேஷ் இதில் கடுமையாக உழைத்து ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்று மாநிலத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments