Advertisement

இன்று கடைசி ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புமா இந்தியா?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.

முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் மிடில்வரிசை பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே கட்டுக்கோப்புடன் வீசுகிறார். புவனேஷ்வர்குமார், அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. இதே போல் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் இரு ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் லோகேஷ் ராகுலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் அணியில் ஏதாவது மாற்றம் செய்ய முயற்சிக்கலாம்.

image

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை இரு ஆட்டங்களிலும் திட்டமிட்டு அருமையாக விளையாடினர். கேப்டன் பவுமா, குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென், ஜேன்மன் மலான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்ய தென் ஆப்ரிக்காவும் ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: ஷிகர் தவான், கேஎல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்

இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி படைத்த மோசமான சாதனை: சேவாக் - ரெய்னா வரிசையில் இணைந்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments