Advertisement

கோலிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் - கங்குலி விளக்கம்     

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக சொல்லப்பட்டது. என்ன நடந்தது? எதனால் இந்த நோட்டீஸ்?

image

கடந்த ஆண்டு முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியை டி20 கிரிக்கெட் போட்டிகளில் வழிநடத்தி செல்வதிலிருந்து விலகுவதாக விராட் கோலி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சொல்லி இருந்தார். அதே போல தொடர் முடிந்ததும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது கோலி இனி டெஸ்ட் அணியை மட்டும் வழிநடத்தினால் போதும் என தேர்வுக் குழு அவரிடம் சொன்னதாக தெரிகிறது. 

அதற்கு முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விலக வேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாக கங்குலி தெரிவித்திருந்தார். மேலும் டி20, ஒருநாள் என இரண்டு ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் அணிகளுக்கும் ஒரே கேப்டன் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வுக் குழு உறுப்பினர்கள் விரும்பியாதல் கோலி ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என கங்குலி தெரிவித்தார். 

ஆனால் கோலி, தன்னிடம் அப்படி எதுவும், யாரும் சொல்லவில்லை என மறுத்துவிட்டு தென்னாப்பிரிக்க சென்றுவிட்டார். அது சர்ச்சையாக வெடித்தது. 

இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு கங்குலி, கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கங்குலி அது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். 

 

“கோலிக்கு நான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக வந்துள்ள செய்திகள் உண்மையில்லை” என மறுத்துள்ளார் கங்குலி. 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக சொல்லி விலகிவிட்டார் கோலி. கங்குலி கூட அது குறித்து ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில் இந்திய அணியை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நபர்களில் முக்கியமானவர் கோலி என சொல்லி இருந்தார்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments