Advertisement

“களத்தில் நடந்தது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்” - ஸ்டம்ப் மைக் சர்ச்சை குறித்து கோலி

இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசி இருந்தார் இந்திய கேப்டன் கோலி. அப்போது கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் DRS முடிவுக்கு எதிராக அதிருப்தி தெரிவிக்கும் விதமாக கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசியது சர்ச்சையானது. அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அவர். இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி 2 - 1 என கைப்பற்றி உள்ளது. 

image

“களத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் மட்டும்தான் அறிவோம். வெளியில் இருப்பவர்களுக்கு களத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வாய்ப்பில்லை. அது ஆட்டத்தின் ஒரு தருணம். அதனை நாங்கள் கடந்து வந்துவிட்டோம். நாங்கள் மூன்று விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்தி இருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கும்” என சொல்லி உள்ளார் கோலி. 

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் அஷ்வின் வீசிய ஃபுள் லென்த் டெலிவரியை தென்னாப்பிரிக்க கேப்டன் எல்கர் மிஸ் செய்தார். அது பேடில் பட்டது. உடனடியாக இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுத்தார். அதனை எதிர்த்து எல்கர் DRS அப்பீல் செய்தார். அதில் பந்து ஸ்டம்ப் லைனில் வீசி இருந்தாலும் ஸ்டம்புகளை தகர்க்க தவறியது. அதனால் டிவி அம்பயர் நாட்-அவுட் கொடுத்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் கோலி, ஸ்டம்புக்கு அருகில் சென்று காட்டமாக பேசி இருந்தார். அது சர்ச்சையாக வெடித்திருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments