Advertisement

”கேப்டனாக இருந்த விராட் கோலி வீரராக மாற சிறிது காலம் ஆகும்” - தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி வீரராக மாற சிறிது காலம் ஆகும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஆக்ரோஷமான பேட்டிங்கால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விராட் கோலியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது, கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.

image

இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்த விராட் கோலி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து அளப்பரிய சாதனைகளை படைத்த கோலியின் தலைமைப் பொறுப்பு, மூன்றே மாதங்களில் 3 வகையான போட்டிகளில் இருந்தும் முடிவுக்கு வந்தது.

image

இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில்...

2020 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்படனாக இருந்த நாள் அந்த பொறுப்பில் இருந்து விலகி வீரராக மாறியதை மேற்கோள் காட்டியுள்ள தினேஷ் கார்த்திக், விராட் கோலியின் அதே மாற்றத்திற்கு 'சிறிது காலம்' ஆகும் என்று கூறியுள்ளார். 'இது மிகவும் வித்தியாசமான கட்டம். கோலி அவ்வாறு இருக்க விரும்ப மாட்டார். அதே நேரத்தில் அணிக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குகிறார்' என்று கார்த்திக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments